குழந்தைகள் (அ) சிறுவர் ஊழியம்: வாரங்கள் தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர்களுக்கான வேதபாட வகுப்புகள் எங்கள் சபையில் நடைபெறுகின்றது. சிறுவர்கள் என்னிடம் வர இடம்கொடுங்கள் என்ற தேவ வார்த்தையின் அடிப்படையில் அவர்களுக்கு வேத ஞானத்தில் வளர தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு போதித்து வருகின்றோம். தேவன் சபை போதகருக்கு அளித்த தரிசனத்தின்படி வருகின்ற 10 ஆண்டுகளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் அமைக்க ஜெபித்து வருகின்றோம். வருடம்தோறும் மே மாதங்களில் இரண்டாம் வாரம் வெவேறு குழுக்களாக பல்வேறு கிராமங்களில் விடுமுறை வேதாகம வகுப்பு நடத்தி வருகின்றோம். இது ஒரு வாரகாலம் நடைபெறும் போதனை வகுப்பு. முற்றிலும் அனுமதி இலவசம். ஒரு வாரகால வகுப்புகள் முடியும் பொழுது, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் சிறுவர்களின் வேத அறிவை வளர்க்க மனப்பாட வசனங்களை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. சிறுவர்களின் சிறுவயதில் அவர்களின் மனதில் விதைக்கப்படும் இந்த வசனம் அவர்களின் பருவவயதில் பயன்படும் என்பது எங்களின் நம்பிக்கை. சிறுவர்களுக்கான படிப்புக்காக பாட புத்தகங்கள், எழுதும் புத்தகங்கள் வழங்கி அவரால் சமுதாயத்தில் முன்னேற முயற்சிக்கிறோம். சில சமயங்களில் சிறுவர்கள் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும் உண்டு. "ஆப்பரேசன் கிறிஸ்மஸ் சைல்ட்" மூலமாக பல தேவனை அறியாத குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளும் வழங்கி இருக்கிறோம்.
பெண் சிசு கொலை: எங்களின் சபை, பெண்சிசு கொலைக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகின்றது. இதுவரை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் பல. தமிழகத்தின் தென் பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கள் ஊழிய தளங்களில் அதிகம். வரதட்சணைக் கொடுமை, பணத்திற்காக மணப்பெண் கொலை என பல உண்டு,.. ஏழ்மை குடும்பத்தில் பெண்குழந்தைகள் பிறக்கும் பொது அவர்களுக்குத் தேவையான பணம் மற்றும் அவர்களின் எதிர்காலத்தில் கொடுக்க இயலாது என்று அறிந்தப் பெற்றோர் விஷம் கொடுத்து பச்சிளம் பெண் குழந்தைகளைக் கொன்று விடுகிறார்கள். ஆங்காங்கே தேவ பிள்ளைகளைக் கொண்டு குழந்தைகளை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்க்கின்றோம். பல படிப்பறிவில்லாத கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு கூடங்களையும்/ கலந்தாலோசனைகளும் வழங்கியுள்ளோம். இதற்காக ஜெபித்தின் விளைவாக அரசின் சட்ட திட்டங்களும், கண்காணிப்பும் பெண் சிசு கொலையை குறைத்துள்ளது.
வேதாகமக் கல்லூரி: தேவன் போதகருக்குக் கொடுத்த தரிசனத்தின்படி. 2022ம் ஆண்டுக்குள் வேதாகமக் கல்லுரி ஆண்டிபட்டி பகுதியில் கட்டப்பட்டு ஏராளமான ஊழியர்களை மிசனெரிகளாக இந்தியாவின் பல பாகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும். முற்றிலும் இலவசமான, மிகவும் தரமான போதனைகளுடன், பல்வேறு வெளி மாநிலங்களை தரிசனமாக கொண்டுப் போதிக்க வேண்டும். கஷ்டங்கள், துயரங்களைத் தாங்கவும், பசி, பிணி, தாகம், பட்டினிகளை தாங்கி சுவிசேஷத்தை எடுத்து செல்லவும் பயிற்றுவிக்க வேண்டும். முற்றிலும் நவீனமயமான கல்லூரியாக இருக்கும் பட்சத்திலும் ஒன்றும் இல்லாமையைப் போதிக்க வேண்டும். ஆசிர்வாதத்தைப் போதிக்கு அதே சமயம், அதற்குத் தேவையான கஷ்டங்களையும் போதிக்க வேண்டும். ஊழியத்தை ஒரு தொழிலாகச் செய்யாமல் ஒரு வாஞ்சையோடு செய்ய போதிக்கப்படும். பெயரளவில் செய்யப்படாமல் பாரத்தோடு செய்யப்படும்.