கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக, கடந்த 1993 ஆண்டு முதல் இந்தியாவில் தென் பகுதியான தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தில் கர்த்தருடைய பெரிதான ஊழியத்தை செய்ய கர்த்தர் உதவி செய்கிறார். ஆண்டிபட்டியை சார்ந்த ஜக்கம்பட்டி, புரம், பாப்பம்மாள்புரம், ஸ்ரீனிவாசநகர் மற்றும் கொண்டம்மநாயக்கன்பட்டி பகுதிகளை எங்களின் இலக்காக கொண்டு ஊழியம் செய்து வருகிறோம். எண்களின் ஊழிய தரிசனம் "கர்த்தரை அறியாத பகுதிகளுக்கு அவரை எடுத்து செல்வது மட்டுமே". கர்த்தர் அற்புதமாக அவரின் சபையை என்னைக்கொண்டு நடத்தி வருகின்றார். முழுவதும் பாரம்பரிய கட்டுக்களாலும் ஜாதி பிடியாலும் மக்கள் கட்டப்பட்டு இருக்கும் இந்த பகுதியுள்ளும் கர்த்தர் எங்களுக்கு முத்தான 50 ஆத்துமாக்களை தந்துள்ளார். கடினமான பாதைகளிலும் துக்கமான நேரங்களிலும் கர்த்தர் ஒருவரே எங்களுக்கு துணையும் ஆருதலுமாய் இருந்து நடத்தி வருகின்றார். வீடுகள் தோறும் வீட்டு சபைகளும் ஜெபக்குழுக்களும் அமைத்து நற்செய்தியை மக்களுக்கு சொல்லி வருகிறோம். கர்த்தர் தந்த தரிசனத்தின் மூலம் 2020ம் ஆண்டுக்குள் 150 ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதே எங்களின் தற்போதைய லட்சியம். எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்,
போதகர் சாலமோன் செல்வராஜ்.